ரூ.13,850 கோடி வங்கி கடன் மோசடி செய்த மெகுல் சோக்சி பெல்ஜியமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்

புதுடெல்லி: ரூ.13,850 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று அங்கு தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி கடந்த 2018ல் ரூ.13,850 கோடி வங்கி பெற்று மோசடி செய்தார். இந்தியாவை விட்டு தப்பி ஓடிய அவர் கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவாவில் தஞ்சமடைந்தார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. மெகுல் சோக்சியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கடன் தொகை மீட்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 2021ல் அவர் டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார். மருத்துவ காரணங்களை காட்டி ஆண்டிகுவாவில் இருந்து சோக்சி வெளியேறினார். இந்நிலையில், சோக்சி தற்போது பெல்ஜியம் நாட்டில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று தங்கி உள்ளார். இது தற்காலிக குடியுரிமை என்றும், ஒருவேளை பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை சோக்சி பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதனால், சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

The post ரூ.13,850 கோடி வங்கி கடன் மோசடி செய்த மெகுல் சோக்சி பெல்ஜியமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: