ஆன்லைன் சூதாட்ட இணையதளத்துக்கு தடைகோரிய வழக்கு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஷேக் ரஹீம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களால் எளிதில் அடிமையாவதாகவும், இதனால் சூதாட்ட இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.மேலும், மனுவில் விளம்பரங்களில் நடித்துள்ள சன்னி லியோன், காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்டோரை எதிர் மனுதார்களாக சேர்த்திருந்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், பொதுநல மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களால் நீங்கள் அடிமையாகி விட்டால் அதற்கு யார் பொறுப்பு என கூறிய நீதிபதிகள், மனுதாரர் ஏற்கனவே இதுபோன்ற வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து திரும்ப பெற்றுள்ளார் என சுட்டிக்காட்டினார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு, மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தி பொதுநல மனு வழக்கை முடித்து வைத்தனர்.

The post ஆன்லைன் சூதாட்ட இணையதளத்துக்கு தடைகோரிய வழக்கு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு! appeared first on Dinakaran.

Related Stories: