இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் கதவை அடைத்து கொண்ட இளைஞர் தனக்குத்தானே வலதுபுற அடிவயிற்று பகுதியில் ஆபரேஷன் கத்தியால் கீறியுள்ளார். அப்போது வயிற்றுப் பகுதியில் 7 இஞ்ச் நீளத்திற்கு ஆழமாக கீறினார். மேலும், வலி தெரியாமல் இருக்க மரத்துப் போவதற்கான மருந்தையும் தடவி உள்ளனர். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட ஆபரேஷன் கத்தி ஆழமாக சென்றது. இதனால் அவருக்கு வலி அதிகமாகி ரத்தம் வர தொடங்கியது. இதனை சரி செய்ய முயன்ற இளைஞர் அந்த இடத்தை தானே 11 தையல்களையும் போட்டுள்ளார். தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது.
பின்னர் வலியால் அவர் அலறி துடித்ததால் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இளைஞரை பார்த்து அச்சமும், ஆச்சரியமும் அடைந்த மருத்துவர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். பின்னர் இளைஞர் நிலைமை மோசமாக இருப்பதால் மருத்துவர்கள் அவரை ஆந்திராவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யூடியூப் பார்த்து தனக்கு தானே வாலிபர் ஆபரேசன் செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
The post யூடியூப் பார்த்து தனக்குத்தானே ஆபரேஷன் செய்த கொண்ட இளைஞர்: தையலை பார்த்து உறைந்து நின்ற மருத்துவர்கள்!! appeared first on Dinakaran.