சீனா: வங்காளதேச அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் கடந்த வருடம் சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசுவதாக சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவர் பந்து வீச ஐசிசி தடை விதித்தது. இதையடுத்து அவருக்கு 2 முறை நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசியது உறுதியானது. இதனால் சமீப காலமாக இவர் வங்கதேச அணியில் இடம் பெறவில்லை. சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் வங்கதேச அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். இந்நிலையில் 3ம் கட்ட சோதனையின்போது ஷகிப் விதிமுறைக்கு உட்பட்டு பந்து வீசினார். இதனால் அவர் மீதான தடை நீக்கப்பட்டு, பந்து வீச ஐசிசி அனுமதி வழங்கி உள்ளது.
The post ஷகிப் மீதான தடை நீக்கம் appeared first on Dinakaran.