பெண் பிரிவில் உலக தரவரிசையில் 17வது இடம் வகிக்கும் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 17-21,19-21 என்ற நேர் செட்டில் 31ம் இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனையான ஜூலி டாவல் ஜேக்கபசனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுபமா உபாத்யாயா 21-14, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வளர்ந்து வரும் இந்திய நட்சத்திரம் நமல் கர்பை தோற்கடித்தார். இஷாராணி பருவா 21-18, 17-21, 20-22 என்ற கணக்கில் ஆகர்ஷி காஷ்யப்பைத் தோற்கடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான மாளவிகா பன்சோத், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்தனர்.
The post சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.