ஆலந்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி பலியானார். பரங்கிமலை – பழவந்தாங்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ரயில் மோதி இறந்து இருப்பதாக மாம்பலம் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதனைஅடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் ரயில் மோதி இறந்தவர் பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்த ராஜசேகரின் மனைவி கவிதா (48) என தெரிய வந்தது. இவர் கடந்த 4 வருடங்கள் தனது தாய் இறந்ததால் மன மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ரயில் வருவது கூட தெரியாமல் நடந்து சென்றபோது இறந்திருக்கலாம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தண்டவாளத்தில் நடந்து சென்றபோது மின்சார ரயில் மோதி பெண் பரிதாப பலி appeared first on Dinakaran.