சென்னை, மே 17: சென்னை கடற்கரை பகுதியில் பயணிகள் நடைபாதை பணிகள் காரணமாக இன்று இரவு (17ம் தேதி) முதல் நாளை காலை 8 மணி வரை கடற்கரை – வேளச்சேரி-கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, வேளச்சேரி – கடற்கரை இடையே இரவு 9, 9.40, 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. அதே போல், நாளை காலை (18ம் தேதி) கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 5, 5.30, 6, 6.30, 7.05, 7.25, 7.45, மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 6, 6.15, 6.35, 6.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக, வேளச்சேரி-கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 5.30, 6, 6.35, 7 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 6, 6.30, 7, 7.35, 8 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
The post பராமரிப்பு பணி காரணமாக இன்று இரவு கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.