முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று(சனிக்கிழமை)வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று இரவு சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: