திண்டிவனம்: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11ம் தேதி நடைபெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினர். இக்கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, எம்எல்ஏக்கள் அருள், சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் 364 சாதிகள் உள்ளது. இந்த மாநாடு அவர்களுக்கு அரணாக இருக்கும். எனவே 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டுகோளாக வைப்பது மாநாடு நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.
The post மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி பாமக வன்னியர் சங்க மாநாடு 364 சமுதாய மக்களும் வரவேண்டும்: ராமதாஸ் அழைப்பு appeared first on Dinakaran.