மும்மொழி திட்டத்துக்கு மூச்சுமுட்ட கத்துவதா? தேர்வு மையம் கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு: மதுரை எம்.பி காட்டம்

மதுரை: மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பதிவு: ரயில்வே லோகோ பைலட் தேர்வுக்கான மையங்களை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ெவளிமாநிலங்களில் ஒதுக்கியது தொடர்பான எனது கடிதத்திற்கு தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ் அளித்த பதிலில் ‘‘ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்த வேண்டி இருப்பதாலும், சிபிடி 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு தேர்வு மையங்களில் பொருத்த முடியவில்லை’’ என விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சமாதானம் செய்யும் பதில்ா? உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வு காணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல. மாணவர்களுக்கான தேர்வு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post மும்மொழி திட்டத்துக்கு மூச்சுமுட்ட கத்துவதா? தேர்வு மையம் கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு: மதுரை எம்.பி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: