லஞ்சம் வாங்கிய விஏஓ உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

திருப்பூர், மார்ச் 13: திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (50). இவருக்கு சொந்தமான இடம் இடையர்பாளையத்தில் உள்ளது. கார்த்திகேயன் சிட்டாவில் பெயர் சேர்க்க வேண்டி இடையர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், சிட்டாவில் பெயர் சேர்க்க இடையர்பாளையம் விஏஓ பிரபு ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தொிகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன் போில் போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை உதவியாளர் கவிதா (37) என்பவர் முலம் கொடுத்து, கையும் களவுமாக பிரவுவை பிடித்தனர். தொடர்ந்து பிரபு, கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே லஞ்சம் பெற்ற பிரபுவை திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகன சுந்தரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.உதவியாளர் கவிதாவை ஊத்துக்குளி தாசில்தார் முருகேஸ்வரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

The post லஞ்சம் வாங்கிய விஏஓ உள்பட 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: