பாலக்காடு, ஜன. 5: வடக்கஞ்சேரியை அடுத்த கிழக்கஞ்சேரி மம்பாடு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (61). இவர் மங்கலம் பாலம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லாட்டரி சீட்டு வியாபாரத்தில் நாராயணன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருச்சூரிலிருந்து பாலக்காடு நோக்கி பைக்கில் வந்த வாலிபர் சாலையோரம் நின்ற முதியவர் மீது மோதினார்.
இதில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
