ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து

 

கோவை,ஜன.5: கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (40). ஆட்டோ டிரைவர். அப்பநாயக்கன்பாளையம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (40). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி மகேஷ்குமார் துடியலூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சந்திர பிரகாஷ் மதுபோதையில் மகேஷ் குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த சந்திரபிரகாஷ் கத்தியால் மகேஷ்குமாரை குத்தினார். பின்னர் பொதுமக்களை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். காயமடைந்த மகேஷ் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து மகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபிரகாஷை தேடி வருகின்றனர்.

Related Stories: