தாராபுரம், ஜன. 9: பைக்குள் மோதிய விபத்தில் 8ம் வகுப்பு மாணவர் பலியானார். தாராபுரம் டி.காளிபாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் சின்னக்காம்பட்டி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சிறுவன், உறவினர் ஒருவருடன் பைக்கில் மூலனூர் நேக்கி சென்றார்.
இவர்களுக்கு முன்னால் முத்து கவுண்டன்வலசை சேர்ந்த மகுடீஸ்வரன் (30) என்பவர் மற்றொரு பைக்கில் சென்றார். கரையூர் அருகே இந்த பைக்குகள் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் திருப்பூர் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
