திருப்பூர், ஜன.5: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் சார்பில் நேற்று மாரத்தான் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படும் விதமாக சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. போலீசார், ஆர்.டி.ஓ மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு மாரத்தான் நடைபெற்றது. இந்த போட்டியை இன்ஸ்பெக்டர் சசிகலா தொடங்கி வைத்தார். மாரத்தான் போலீஸ் நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் சென்று மீண்டும் போலீஸ் நிலையம் வந்தடைந்தது. மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். எஸ்.ஐ சிவஞானபாண்டியன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
