இதன்தொடர்ச்சியாக திமுக சார்பில் ‘’தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நாளை திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். ஒன்றிய அரசு செய்யும் அநீதிகளை எதிர்த்து முதல் குரல் கொடுப்பது இந்தியாவிலேயே ஒரே முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர்தான். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு பிரச்னை இருந்தாலும் போராட்டத்தில் முதலில்இருப்பதும் திமுகதான். ஒன்றிய அரசின் அநீதிகளை மோடியின் செவியில் கேட்கும் அளவிற்கு நமது கண்டனங்களை தெரிவித்து போராட்டத்தை வெற்றி பெற செய்யவேண்டும்.
பாஜக ஆளாத மாநிலங்களை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து எழுப்பப்படும் உரிமைக் குரல், எப்போதும் தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் ஒலிக்கும். அப்படித்தான் இப்போதும் கள நிலவரம் இருக்கிறது. அதிலும் சிறப்பம்சமாக திமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெற்றாலும் அதற்கு தலைமையாய் திருவள்ளூரை தேர்வு செய்து, நம்முடைய கழகத்தினருடனும், மக்களுடனும் சேர்ந்து முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு எதிராக ஜனநாயக குரலை எழுப்ப இருப்பது நமக்கான பெருமை. ஆகையால் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நாளை மாலை 4.30 மணி அளவில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
The post திருவள்ளூரில் நாளை ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் பங்கேற்கும் கூட்டத்துக்கு அலைகடலென திரண்டு வாரீர்: மாவட்ட செயலாளர்கள் அழைப்பு appeared first on Dinakaran.