அதன்படி சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் சபரிநாதன் (விருகம்பாக்கம் தொகுதி), சென்னை மத்தியம் (தெற்கு)-தீலிப்குமார் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி), செங்கல்பட்டு மாவட்ட தலைவர் குமார் (பல்லாவரம்), செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தலைவர் சரத்குமார் (தாம்பரம்), சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பல்லவி (திரு.வி.க.நகர்), சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் வேலு (ஆர்.கே.நகர்),
திருவள்ளூர் தென் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு (மாதவரம்), சென்னை வடக்கு (தெற்கு) மாவட்ட செயலாளர் விஜய ராகவன் (ராயபுரம்) உள்பட 19 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தவெகவிற்கு 120 மாவட்டங்கள் தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்டு ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
* விஜய்யின் உதவியாளர் மகன் மாவட்ட செயலாளராக நியமனம்
தென் சென்னை, மேற்கு மாவட்ட செயலாளராக விஜய்யின் முன்னாள் கார் ஓட்டுநரும், தற்போது உதவியாளராகவும் 40 ஆண்டுகள் விஜய்யுடன் பயணித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரிநாதனுக்கு தற்போது விருகம்பாக்கம் தொகுதிக்கான மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 21 வயதில் இருந்து விஜய் மக்கள் இயக்கம், தவெகவில் பணிகளை செய்து வந்த நிலையில் இந்த பதவி வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாவட்டத்தில் ஏற்கனவே விஜய்யுடன் 30 ஆண்டுகளாக பயணித்து வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கடந்த 3 மாதங்களாக கடும் போட்டி இருந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் மட்டுமே விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட சபரிநாதனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
The post தவெகவின் 6ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல்: விஜய் வெளியிட்டார் appeared first on Dinakaran.