சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரை செய்ய வேண்டுமென பாஜ திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. தொகுதி மறுவரையறை பிரச்னையில் பாஜ வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாடு, குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடுமையாக பின்பற்றியதால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. எனவே, தற்போதைய சூத்திரத்தின் கீழ் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், 2029 தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் கடுமையான சரிவை சந்திக்க நேரிடும். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்டப்படாமல் இருந்தால்தான் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் ஏற்படுகிற நியாயமற்ற ஏற்றத் தாழ்வுகளை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் பாஜவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாததால் தென் மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை appeared first on Dinakaran.