2000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம்… தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள்!!

சென்னை : 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதில் இடம் பெற்ற சென்னைக்கான சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

*சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு. நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும்.

*அடையாறு நதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

*திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்

*வேளச்சேரியில் புதிய பாலம் அமைக்க ரூ.310 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

*திருவான்மியூர் – உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு

*சென்னை வண்ணாரப்பேட்டை, கிண்டியில் பன்முகப் போக்குவரத்து முனையம் தலா 50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

*சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் – ரூ.2,423 கோடி ஒதுக்கீடு

*ரூ.88 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)

*கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடியில் அமைக்கப்படும்.

* கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ரூ.3450 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

*வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.6,858 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*சென்னை மழை வெள்ள நீரை சேமிக்க புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். கோவளம் அருகே உள்ள உபவடி நிலத்தில் ரூ.350 கோடியில் 4,375 ஏக்கர் பரப்பில் 1.6tmc கொள்ளளவுடன் அமைக்கப்படுகிறது.

*சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* சிங்கப்பூருடன் இணைந்து சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

* சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்.

The post 2000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம்… தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள்!! appeared first on Dinakaran.

Related Stories: