மாசி திருவிழா கோலாகலம் ஓலைப்பிடாரியில் புத்தூர் குழுமாயி அம்மன் வீதியுலா

திருச்சி, மார்ச் 6: திருச்சி, குழுமாயி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஓலைபிடாலியில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்சி புத்துார் குழுமாயி அம்மன் கோயில் திருவிழா மாசி மாதத்தில் 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு திருவிழா மார்ச். 3ம் தேதி முதல் துவங்கியது. விழாவில் நேற்று சுத்த பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அம்மன் தாறை, தப்பட்டைகள் முழங்க தேரில், ஓலைபிடாரியில் தன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்கள். பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, மாவிலக்கு, இளநீர், பூ, பழங்கள் போன்றவற்றை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். ஏராளமான இடங்களில் அண்ணாதானம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடி திருவிழா இன்று (மார்ச்.6ம் தேதி) நடைபெறுகிறது. குட்டிக்குடி விழாவில் முதல் குட்டியாக அறநிலையத்துறை சார்பில் அரசு குட்டி வழங்கப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப குட்டிகளை பலி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். நாளை (மார்ச் 7ம் தேதி) மஞ்சல் நீராட்டு விழாவும், மார்ச்.8ம் தேதி அம்மன், கோயிலுக்கு மீண்டும் குடிபுகுதல் விழாவும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் அம்மன் புத்தூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேரில், ஓலைப்பிடாரியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
இந்த திருவிழாவில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அவர்கள் எடுத்து வரும் உடமைகளை பாதுகாக்க உறையூர் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post மாசி திருவிழா கோலாகலம் ஓலைப்பிடாரியில் புத்தூர் குழுமாயி அம்மன் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: