நாமக்கல், ஜன.10: நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, திருச்சி சாலை பகுதிகளில், சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பொக்லைன் வாகனம், தகுதிசான்று புதுப்பிக்காத ஒரு ஆம்புலன்ஸ், வாடகை வாகனமாக பயன்படுத்தப்பட்ட சொந்த வாகனம் மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 2 வாகனம் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post விதிமீறி இயக்கப்பட்ட 6 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.