மைனஸ் விலையை அகற்ற பண்ணையாளர்கள் எதிர்பார்ப்பு

 

கூட்டத்தில் கோழிப்பண்ணையாளர்கள் பேசுகையில், ‘முட்டை விற்பனையில் மைனஸ் முறையை அகற்றவேண்டும். என்இசிசி அறிவிக்கும விலைக்கு மட்டுமே, அனைத்து பண்ணையாளர்களும் முட்டை விற்பனை செய்யவேண்டும். என்இசிசி அறிவிக்கும் விலைக்கும், வியாபாரிகள் கேட்கும் விலைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. நேபா என்ற அமைப்பு மைனஸ் விலை என்ற பெயரில், முட்டை விற்பனை விலையை அறிவிப்பதால் பண்ணையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து கோழிப்பண்ணையாளர்களும்

ஒற்றுமையுடன் என்இசிசி அறிவிக்கும் விலைக்கு முட்டை விற்பனை செய்யும் சூழ்நிலை வந்தால் தான் இந்த தொழிலில் லாபம் வரும்,’ என்றனர். இதற்கு பதில் அளித்து பேசிய என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், ‘கடந்த ஓராண்டாக என்இசிசி அறிவிக்கும் விலைக்கு தான் வியாபாரிகள் வாங்கி வந்தனர். தற்போது மைனஸ் விலை என்ற பெயரில், வியாபாரிகள் விலை குறைத்து கேட்கின்றனர். பண்ணையாளர்கள் ஒற்றுமையுடன் என்இசிசி அறிவிக்கும் விலைக்கு, முட்டை விற்பனை செய்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்,’ என்றார்.

 

The post மைனஸ் விலையை அகற்ற பண்ணையாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: