மினிலாரி மோதி தொழிலாளி பலி

 

பரமத்திவேலூர், ஜன.6:திருச்செங்கோடு அருகே, இளநகர் பழையவலசு பகுதியை சேர்ந்தவர் மோகன் (56), கூலித்தொழிலாளி. இவர் தனது மகன் ஆனந்தன்(32) உடன், 3ம் தேதி உறவினரின் ஈம காரியத்திற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல இளநகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக வந்த மினி லாரி, மோகன் மீது மோதி‌ விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த மோகனை, ஆனந்தன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post மினிலாரி மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: