ராசிபுரம், ஜன.10: ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு குப்பைகளை சேகரிக்கும் பணியில் நிரந்தர பணியாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த பணியாளர்களும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த டெண்டர் எடுத்தவர் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படவில்லை எனவும், தங்களுக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, நேற்று காலை தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாமல், புறக்கணிப்பு செய்ய போவதாக கூறினர். இதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் பணிக்கு திரும்பி சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு appeared first on Dinakaran.