நாமக்கல், ஜன.6:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வருவதாக நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நல்லிபாளையம் பைபாஸ் பிரிவு ரோட்டில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடைசெய்யப்பட்ட 250 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, காரில் இருந்த ₹85 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தி வந்த, வள்ளிபுரம் தக்காளி வியாபாரி செந்தில்ராஜ் (46), நாமக்கல் ஜெட்டிக்குள தெருவை சேர்ந்த தவுபிக் ரகுமான் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
The post காரில் 250 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.