போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

பரமத்திவேலூர், ஜன.9 : பரமத்திவேலூரில் போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து, தலைமறைவானவரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு உணவு விடுதி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ சீனிவாசன் அப்பகுதியில் ரோந்து சென்றபோது, வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பழையபாளையம் சாலையில் உள்ள வெங்கடாசலம் மகன் லீலி (எ) நித்திஷ்(26) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள், டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். மேலும், போதை மாத்திரைகளை விநியோகம் செய்த, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த அபிஷேக் (எ) சிங்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: