நிலுவை வரிகளை செலுத்தாமல் விட்டால் ஜப்தி நடவடிக்கை

திருச்செங்கோடு, ஜன.7: திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்செங்கோடு நகராட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கவும், நகராட்சி சேவைகளை செம்மைப்படுத்தவும், நகராட்சி நிர்வாகம் அர்ப்பணிப்பு உணர்வுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை தொடர்ந்து நடைமுறை படுத்த முக்கிய ஆதாரமாக விளங்குவது, நகராட்சியின் வரி வருவாய் ஆகும். ஆகவே, நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள், தாங்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமை கட்டணம், நகராட்சி கடைகள் வாடகை, குத்தகை கட்டணம் ஆகியவற்றை நிலுவை இன்றி நகராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, அபராத கட்டணம் வசூலிப்பு, ஜப்தி ஆகிய சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நிலுவை வரிகளை செலுத்தாமல் விட்டால் ஜப்தி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: