அப்பகுதியிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற தீயணைப்புத்துறை உத்தரவிட்டதை அடுத்து வாகனங்கள் உள்ளிட்ட உடமைகளை விட்டுவிட்டு சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவியதால் ஏராளமான வீடுகள் பற்றி எரிகின்றன. இதுவரை 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளை காட்டு தீ அழித்து விட்டதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வனத்தை ஒட்டிய லாஸ் ஏஞ்சலஸ் நகர பகுதியில் உள்ள 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கலிஃபோர்னியா தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post கலிஃபோர்னியாவில் தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீ: லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குள்ளும் பரவியதால் பதற்றம் appeared first on Dinakaran.