ஆபாச பட நடிகை வழக்கில் தண்டனைக்கு தடை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் மனு

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு, தன்னுடைய பாலியல் உறவு பற்றி வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு தேர்தல் நிதியிலிருந்து பணம் கொடுத்ததாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என கடந்த மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ஜூவான் மெர்சன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பதவியேற்கும் வரை தண்டனையை வெளியிடாமல் ஒத்திவைக்க வேண்டுமென டிரம்ப் தரப்பில் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட இருக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஆபாச பட நடிகை வழக்கில் தண்டனைக்கு தடை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் மனு appeared first on Dinakaran.

Related Stories: