வெளிநாட்டு நிறுவனங்கள் மீது நீதித்துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகள், விசாரணைகள் இந்தியா போன்ற அமெரிக்காவின் நெருக்கமான நாடுகளான ஒத்துழைப்பை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. அதோடு பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். அமெரிக்காவின் அதிகரிக்கும் வன்முறைகள், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட உண்மையான அச்சுறுத்தல்களை நாம் புறக்கணித்து விட்டு, நமது பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களை குறிவைத்து அமெரிக்காவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும்.
அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட விவகாரங்களை வைத்து நீதித்துறை களமிறங்கினால் அது அமெரிக்காவின் தொழில்துறையை பாதிக்கும். புதிதாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க நீதித்துறை தனது அதிகார வரம்பை அறிந்து செயல்பட வேண்டும். ஒருவேளை இந்தியா, அதானியை நாடு கடத்த முடியாது என மறுத்து விட்டால் என்ன செய்வீர்கள்? அதானி வழக்கிற்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. வெளிநாட்டில் குற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் எந்த அமெரிக்கர்களுக்கும் தொடர்பு இல்லையே? இதுவே ஜார்ஜ் சோரஸ் சம்மந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் மீது புகார் கூறினால் அதை நீதித்துறை கண்டுகொள்வது கூட இல்லை. இவ்வாறு கடுமையாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post ‘இந்தியாவின் நட்பை கெடுக்க பார்க்கிறீர்களா?’ அதானி வழக்கு விசாரணைக்கு டிரம்ப் கட்சி எம்பி கடும் எதிர்ப்பு: அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் appeared first on Dinakaran.