வரும் 11ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா, புறக்கணிப்பா? முக்கிய முடிவு எடுக்க எடப்பாடி திட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிக்கலாமா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நடந்த பொதுத்தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணிக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுக, இடைத்தேர்தலை புறக்கணித்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள். இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 11ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 11ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று அதிமுக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post வரும் 11ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா, புறக்கணிப்பா? முக்கிய முடிவு எடுக்க எடப்பாடி திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: