ஊராட்சிகளில் விளை நிலங்களாக இல்லாத இடங்களையே நகர்புற அமைப்புகளோடு இணைக்கிறோம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது செங்கோட்டையன்(அதிமுக) பேசுகையில் “ ஊராட்சிகளை நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது “ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் “தமிழகத்தில் 12,300 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் தற்போது 371 ஊராட்சிகளை மட்டுமே நகர்ப்புற அமைப்புளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஊராட்சிகளை நகர்புற அமைப்புகளுடன் இணைப்பதில் விருப்பம் இல்லை என்றால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் 120 நாட்களுக்குள் கூறினால் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டம் இல்லாமல் போய் விடும் என ஊராட்சிகளில் உள்ள மக்கள் நினைக்கின்றனர். ஊராட்சிகளில் விளை நிலங்களாக இல்லாத இடங்களையே நகர்புற அமைப்புகளோடு இணைக்கிறோம்” என்றார்.

The post ஊராட்சிகளில் விளை நிலங்களாக இல்லாத இடங்களையே நகர்புற அமைப்புகளோடு இணைக்கிறோம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: