ஐகோர்ட் வளாகத்துக்குள் வெடிகுண்டு வந்தது எப்படி? போலீஸ் அறிக்கை தர உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்று கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இறுதி விசாரணைக்காக வழக்குகளை வரும் 27ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post ஐகோர்ட் வளாகத்துக்குள் வெடிகுண்டு வந்தது எப்படி? போலீஸ் அறிக்கை தர உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: