வாரத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகின்றன. காலை 6 மணிக்கு நெல்லை சந்திப்பில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 11ம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 சேர் கார் பெட்டிகள், 2 எக்ஸிக்யூடிவ் கார் பெட்டிகள் என்ற வகையில் இனிமேல் இயக்கப்பட உள்ளது. அதேபோல் திருவனந்தபுரம் – காசர்கோடு – திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் சேர்க்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி appeared first on Dinakaran.