காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகள், காஞ்சிபுரம் மாநகரம், வட்டாரம், உத்திரமேரூர் வட்டாரம், பேரூராட்சி, வாலாஜாபாத் வட்டாரம், பேரூராட்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான கிராம, நகர வார்டு கமிட்டிகள் மறு சீரமைப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாதன் தலைமை தாங்கினார்.

வார்டு மறுசீரமைப்பு நிர்வாகிகள் சி.ஆர்.பெருமாள், அகரம் கே.பாஸ்கர், ஜெ.தரணிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கிராம, நகர, வார்டு கமிட்டிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் காஞ்சி.மதியழகன், ஆர்.சீனிவாச ராகவன், ஆர்.குமரகுருநாதன், பத்மநாபன், அன்பு மற்றும் வட்டார தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உட்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: