இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ்: கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

மதுராந்தகம்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அந்த விழாவில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பிதழை நிர்வாகிகளுக்கு க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொங்கல் விழா அழைப்பிதழை நிர்வாகிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை இடைக்கழி நாடு கப்பிவாக்கம் கலைஞர் திடலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, 48 கழக தோழர்களுக்கு நூற்றாண்டு நாணயம் வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, 200 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, விளையாட்டுக் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணம், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்க வருகை தந்து சிறப்பிக்க உள்ளார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். இளைஞர் அணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் அனைவரையும் வரவேற்க உள்ளார். மாவட்ட அவை தலைவர் இனியரசு, துணை செயலாளர் கோகுலக்கண்ணன், மலர்விழிக்குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், இளைஞர் அணி நிர்வாகிகள் மணி, பால்ராஜ், சஞ்சய் காந்தி, அருள் முருகன், ஆண்டோ சிரில் ராஜ், யுவராஜ், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் நன்றி உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியையொட்டி ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி இடைக்கழிநாடு பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு அழைப்பிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், கண்ணன், தம்பு, சரவணன், சிற்றரசு, பாபு, சிவக்குமார், பொது குழு உறுப்பினர் வெளிக்காடு ஏழுமலை, பேரூர் செயலாளர்கள் மோகன்தாஸ், பாரி வள்ளல், எழிலரசன், சுந்தரமூர்த்தி, பாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் சம்யுக்த அய்யனார், சசிகுமார், தசரதன், மீனவர் அணி அமைப்பாளர் பாரத், துணைச் செயலாளர் ரஞ்சித், மாணவர் அணி துணை அமைப்பாளர் சரண், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

The post இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ்: கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: