நீலகிரியில் வாட்டும் உறைபனி பொழிவு அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி: கடும் குளிரால் மக்கள் அவதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக உறைபனி தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், கடும் குளிர் நிலவி வருவதால் அதிகாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று அதிகாலை வழக்கத்தை விட உறைபனியின் தாக்கம் அதிகரித்த நிலையில் ஊட்டியில் குதிரை பந்தய மைதானம், தாவரவியல் பூங்கா புல் மைதானம், உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. குடியிருப்புகள், சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டூவீலவர்கள் மீதும் பனி படர்ந்து காணப்பட்டது.

இதனால், அதிகாலையில் ஊட்டி, அவலாஞ்சி, சுற்று வட்டார பகுதிகள் மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது. ஊட்டியில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை கடுமையாக சரிந்தது. நேற்று அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் ஊட்டியை விட பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அவலாஞ்சியில் நேற்று அதிகாலை வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியசுக்கு சென்றது. அதே நேரம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 11.9 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 2.3 டிகிரியாகவும் பதிவானது. வரும் நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்பநிலை 0 டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

The post நீலகிரியில் வாட்டும் உறைபனி பொழிவு அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி: கடும் குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: