எனவே, பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும். சீனப்போர் தொடங்கி கார்கில் போர் வரை திமுக அதற்கு தனிப்பட்ட முறையில் நிதிவழங்கி இருந்தாலும், அரசின் சார்பில் வழங்கி இருந்தாலும் மற்ற மாநிலங்களை விட மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய பங்கை ஆற்றிவந்துள்ளது. ஆளுநர் உரை முடிவில் கூட வாழ்க பாரத நாடு என்று தான் முடித்துள்ளோம். தேச ஒற்றுமை, தேசபக்தி குறித்து ஆளுநர் பாடம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான். தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே இரண்டு முறை பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். பதவிக்காலம் முடிந்து பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆளுநர் ரவி அதனை அவமானமாக கருதி உடனடியாக ராஜினாமா செய்வது தான் அவர் படித்த படிப்பிற்கும், பதவிக்கும் அழகு. இவ்வாறு அவர் கூறினார்.
The post 2 முறை தேசியகீதம் அவமதிப்பு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.