முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குழந்தைகளின் நலன் மீது அரசு கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர். என். ரவியின் உரை: 1962ம் ஆண்டு பள்ளிச் சேர்க்கை விகிதத்தை உயர்த்தி, இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, காமராசரால் கொண்டுவரப்பட்ட மதிய உணவு திட்டம், 1982ம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரனால் சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டது. மேலும், 1989ம் ஆண்டு கலைஞர் அவரால் இத்திட்டம் மேலும் உயர்த்தப்பட்டது.

இதனை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமாக மாற்றி தமிழ்நாட்டின் பெயரை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தற்போது கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் நலன் மற்றும் கல்வி வளர்ச்சி மீது இந்த அரசு கொண்டுள்ள அக்கறையையும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டினையும் எடுத்துக்காட்டும் வகையில் இத்திட்டம் விளங்குகிறது.

 

The post முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குழந்தைகளின் நலன் மீது அரசு கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகிறது appeared first on Dinakaran.

Related Stories: