அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.ெசழியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தேன். கடந்த செப். 13ல் அசல் சான்றிதழ் பதிவுகளை சமர்ப்பித்து சரி பார்ப்பில் கலந்து கொண்டேன். என் மீது ஆர்ப்பாட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நிலுவையில் இருப்பதால், பாஸ் ேபார்ட் வழங்க எந்த தடையும் இல்லை. எனவே, எனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான முந்தைய உத்தரவுகளின் அடிப்படையில், மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 

The post அமைச்சர் கோவி.செழியனுக்கு பாஸ்போர்ட் வழங்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: