தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: சட்டம் -ஒழுங்கை பொறுத்தவரை, சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. போதை பொருட்களுக்கு எதிரான பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை இந்த அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
தொடர் சோதனைகள், சிறப்பு போதை பொருள் எதிர்ப்பு இயக்கங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள், மேம்படுத்தப்பட்ட எல்லை சோதனை சாவடிகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த அச்சுறுத்தலை தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் அமைதி நிலவிடவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திடவும் அரசால் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டின் மொத்த பெண் தொழிற் பணியாளர்களில் 41 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூப்பட்டுள்ளது.
The post சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது appeared first on Dinakaran.