பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சோமனூரில் மண்பானை விற்பனை அமோகம்


சோமனூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சோமனூரில் மண்பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழர் பாரம்பரிய திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு 14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 16ம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த மூன்று நாட்களிலும் தமிழர்கள் பொங்கல் வைத்து சிறப்பிப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக புதிய மண்பானையில் பொங்கல் வைப்பது தமிழரின் பாரம்பரிய மரபு. இந்நிலையில் பொங்கல் வைப்பதற்காக பொங்கல் பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி சோமனூரில் ரூ.100 முதல் ரூ. 2 ஆயிரம் வரை பொங்கல் பானை விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் வர்ணம் பூசிய மண்பானை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உறியடித்தல், சேவல் சண்டை, வழுக்கு மரம் ஏறுதல், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் அந்தந்த கிராமங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களுக்கு தேவையான பொங்கல் பானைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சோமனூரில் மண்பானை விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: