அண்ணா பல்கலை சம்பவத்தில் நடவடிக்கை எடுத்த பிறகும் அரசியலாக்க பார்க்கிறார்கள்: எதிர்க்கட்சிகள் மீது கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நேற்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி அளித்த பேட்டி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு குற்றம் நடந்திருக்கிறது. ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு போய் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு அந்த குற்றவாளிகளுக்கு நியாயமான தண்டனை கிடைப்பது தான், அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததாக இருக்கும்.

அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது தான் முக்கியம். பொள்ளாச்சியில் நடந்தது போல நடவடிக்கையை எடுக்காமல், குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடிய ஒரு நிலை இல்லை. நடவடிக்கை எடுத்த பிறகும், எதிர்க்கட்சிகள் அதை கையில் எடுத்து கொண்டு அரசியலாக்க பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post அண்ணா பல்கலை சம்பவத்தில் நடவடிக்கை எடுத்த பிறகும் அரசியலாக்க பார்க்கிறார்கள்: எதிர்க்கட்சிகள் மீது கனிமொழி எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: