இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டுப்பாடுகள் விதித்து விதிகள் கொண்டு வந்தது. அந்த விதிகளில், அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்ல பிராணிகள் மலம் கழித்தால் அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முதல் முறை 1000 ரூபாயும், இரண்டாவது முறை 2000 ரூபாயும், மூன்றாவது முறை 3000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
மூன்று முறைக்கு மேலானால் குடியிருப்பு வாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பிராணிகள் சிறுநீர் கழித்தால், 250 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், இயற்கை உபாதைகளுக்காக திறந்தவெளிக்கு பிராணிகளை அழைத்துச் செல்ல லிப்ட்டை பயன்படுத்த தடையும் விதித்து விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்க கோரி மூதாட்டி மனோரமா சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை 16வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்தார். அப்போது, குடியிருப்பு வாசிகள் செல்ல பிராணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொண்டு வரப்பட்ட இந்த விதிகள், விலங்குகள் நல வாரிய விதிகளுக்கு முரணானது என்று மனோரமா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், விலங்குகள் நல வாரிய விதிகள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களை கட்டுப்படுத்தாது என்று குடியிருப்போர் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, விலங்குகள் நல வாரியத்தின் விதிகள் சட்டப்படி பிறப்பிக்கப்பட்டவை. எனவே, பிராணிகள் மலம் கழித்தாலோ, சிறுநீர் கழித்தாலோ, அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்யாவிட்டால் அபராதம் விதித்து நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லாது. பிராணிகளுக்கு அபராதம் விதிக்க தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post செல்ல பிராணிகள் மலம், சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கும் விதி செல்லாது: அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் சிவில் கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.