அதைதொடர்ந்து கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகள் முதன் முதலாக நேற்று அனுமதிக்கப்பட்டனர். படகில் சென்ற 5 ஆயிரம் பேர், கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று கடல் அழகை ரசித்தனர். செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
The post கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி appeared first on Dinakaran.