அப்போது, சர்ச்சில் பாதிரியராக உள்ள கெனிட் ராஜ் (47) என்பவரிடம், கடந்த சில நாட்களாக எனக்கு மன உளைச்சலாக உள்ளது என்று கூறினேன். அதற்கு அவர் உனக்கு உடம்பில் ஆவி, பிசாசு ஏதாவது புகுந்து இருக்கலாம், நீ எனது வீட்டிற்கு வா, நான் ஜெபித்து சரிசெய்கிறேன் என்று கூறினார். அதன்படி கடந்த 16ம் தேதி நான், பாதிரியார் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர், உடம்பில் அங்காங்கே கைவைத்தும், கட்டிப்பிடிக்கவும் முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்து நான் அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன்.
நடந்த சம்பவத்தை எனது கணவரிடம் கூறினேன். பிறகு எனது குடும்பத்தாரிடம் ஆலோசனை செய்துவிட்டு தற்போது புகார் அளிக்கிறேன். எனவே ஆவி பிசாசு ஓட்டுவதாக தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதன்பேரில், பாதிரியார் கெனிட் ராஜ் மீது பிஎன்எஸ் 296, 75, 76, 351(2) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியார் கைது appeared first on Dinakaran.