இவர் சந்திரனிடம் ₹15,000 லஞ்சம் கொடுத்தால்தான் உங்களுக்கு பட்டா வழங்க முடியும் என்று கூறியதால் சந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுமனுக்கு கொடுக்குமாறு சந்திரனிடம் கூறியுள்ளனர். அதன்பேரில், சுமன் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளரான ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்பவரிடம் பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக பொன்னையன் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் சுமன் பணத்தை பெறும்படி பொன்னையனிடம் கூறியது உறுதியானது. இதனையடுத்து சுமன் மற்றும் பொன்னையன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவு ஆய்வாளர் கைது: உதவியாளரும் சிக்கினார் appeared first on Dinakaran.