சென்னை: சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 04.12.2024ம் தேதி மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், x (Twitter) மற்றும் Instagram ஆகிய சமூக வலைதளங்களிலும், Signal App என்ற செல்போன் செயலியிலும், ஒரு குறிப்பிட்ட நபர் குழுக்களை ஆரம்பித்து அதில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், மேலும் அக்குழுவில் உள்ள மற்ற நபர்களால் மேற்படி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்ததின் பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் (West Zone Cyber Crime Police Station) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) அறிவுரையின்படி, மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் மேற்பார்வையில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் எதிரியின் X (Twitter) ID, Account Creator மற்றும் IPDR விவரங்களை கொண்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட வங்கா ரகுநாத்ரெட்டி மற்றும் ஶ்ரீஹரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த நவீன்ஷங்கர், வ/25, த/பெ.தனஞ்செயன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி நவீன்rஷங்கர், சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருவதும், மேற்படி எதிரி வங்கா ரகுநாத் ரெட்டியுடன் சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்து Telegram ID வழியாக குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி நவீன்ஷங்கர் விசாரணைக்குப் பின்னர் இன்று (27.12.2024) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர் செய்யப்பட உள்ளார்.
The post சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.