தொடர்ந்து, ராஜிவ்காந்திக்கு ஆதரவாக வல்லரசு, மனோ, கோகுல் ஆகியோரும், அருணுக்கு ஆதரவாக மதன், கோபி, முரளி ஆகியோரும் ஒருவரை ஒருவர் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில், இரு தரப்புக்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை எஸ்ஐ ராக்கிகுமாரி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார், ராகவநாயுடுகுப்பம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட முரளி (34), ராஜிவ்காந்தி (37) ஆகிய 2 பேரை கைது செய்து, தலைமறைவான 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post கோஷ்டி மோதலில் 2 பேர் கைது: 6 பேருக்கு வலை appeared first on Dinakaran.