ஐநாவின் நீதி கவுன்சில் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் நியமனம்

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூருக்கு கடந்த 19ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் உள் நீதிக்கவுன்சிலின் உறுப்பினராக, தலைவர் பதவியில் நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பதவிக்காலம் 2028ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதியுடன் முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதர கவுன்சில் உறுப்பினர்களின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். கடந்த 1953ம் ஆண்டு பிறந்த நீதிபதி லோகூர் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஓய்வுபெறும் வயதை அடைந்ததை அடுத்து 2018ம் ஆண்டு டிசம்பர் 30ம்தேதி பதவியில் இருந்து விலகினார். 2019ம் ஆண்டு பிஜி நாட்டின் உச்சநீதிமன்றத்துக்கு குடியுரிமை இல்லாத குழுவின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

The post ஐநாவின் நீதி கவுன்சில் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: